மீன் பிடிப்பதற்கு தண்ணீரை வெளியேற்றிய வியாபாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சடைகட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி அமைந்திருக்கிறது. இந்நிலையில் ஏரியில் இருக்கும் மீன்களை பிடிக்க சின்ராஜ் என்பவர் கடந்த வருடம் ஏலம் எடுத்துள்ளார். அதனால் குத்தகைதாரர் சார்பாக மீன் வியாபாரி ஒருவர் மீனவர்களுடன் ஏரிக்கு சென்று மீன்களை பிடிக்க சென்ற நிலையில் அங்கு எதுவும் சிக்கவில்லை. அதனால் கோபமடைந்த மீன் வியாபாரி பொக்லைன் எயந்திரம் மூலமாக ஏரிலிருந்து வடிகால் வாய்க்கால் மூலமாக நீரை வெளியேற்றி உள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் என் தண்ணீரை வெளியேற்றுகிர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த வந்த ஊராட்சி செயலாளரையும் பெண் என கருதாமல் மீன் வியாபாரி அவரை ஆபாசமாக திட்டி மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுவது காரணத்தினால் சட்ட ஒழுங்கு முறை பிரச்சினை ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.