ஏரியில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆதனூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலு அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஏரியில் தவறி விழுந்து அங்குள்ள சேற்றில் சிக்கிக்கொண்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் சேற்றில் சிக்கி கொண்ட வேலுவை அக்கம்பக்கத்தினர் தேடிவந்தனர்.
இதனையடுத்து சுமார் அரை மணி நேரம் கழித்து சேற்றில் சிக்கிய வேலுவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வேலுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.