ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் மங்கலத்தில் இருந்து சோமாசிபாடி சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் திடீரென ஏரியில் கவிழ்ந்து பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.