Categories
தேசிய செய்திகள்

YES Bank வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 4 மாதங்களில்….. வெளியான அறிவிப்பு…..!!!!

அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன் அட்டைகள்  வழங்கப்படும் என்றும், இது தொடர்பான முக்கியமான தகவல்களை வங்கியின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். புதிய கிரெடிட் கார்டுகள் தொடர்பாக Rupay நிறுவனத்துடன் ஏற்கனவே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் மற்றும் Visa நிறுவனத்துடனான ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்திடப்படும் என்று அவர் கூறியுள்ளனர். மேலும் அடுத்த 90 முதல் 120 நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு கடன் அட்டைகளை வழங்கும் பணி தொடங்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மாஸ்டர் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு புதிய கிரெடிட் கார்டுகளை வங்கியால் வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மாஸ்டர்கார்டு நிறுவனம் பின்பற்றவில்லை, அதன் பிறகு இந்தியாவில் புதிய கடன் அட்டைகளை மாஸ்டர்கார்டு நிறுவனம்  வழங்கக்கூடாது என்றும், அதற்கு தடையும் RBI விதித்தது.

மாஸ்டர்கார்டு வாடிக்கையாளர்களின் தரவை இந்தியாவில் மட்டுமே சேமிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. அதே நேரத்தில் மாஸ்டர்கார்டு அதைப் பின்பற்றவில்லை. இதன் காரணமாக புதிய கடன் அட்டைகளை வழங்க மாஸ்டர்கார்டுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததால், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கடந்த சில மாதங்களில்  ஒரு லட்சம் கிரெடிட் கார்டுகள் யெஸ் வங்கி வழங்கியுள்ளது. அவை அனைத்தும் மாஸ்டர் கார்டுகள் என்பதால், ரிசர்வ் வங்கி தடையால் யெஸ் பேங்க் மிகவும் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக ரூபே மற்றும் விசா  நிறுவனத்துடன் யெஸ் வங்கி ஒப்பந்தம் செய்து வருகிறது. இந்த ஒப்பந்தம் முடிந்தவுடன், புதிய கடன் அட்டைகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் புதிய கடன் அட்டைகள் என்று YES Bank அறிவித்துள்ளது.

Categories

Tech |