Categories
சினிமா தமிழ் சினிமா

ஆமா!… “எனக்கு அது கேக்குது”….. பேட்டியில் சர்ச்சையாக பேசிய நடிகர் பப்லு….. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். ‌ இவருக்கு தற்போது 56 வயது ஆகிறது. இவர் மலேசியாவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியானது.

இது தொடர்பான தகவல்களுக்கு நடிகர் பப்லு எது செய்தாலும் வெளிப்படையாகத்தான் செய்வேன். நான் மறைமுகமாக செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். இதனால் பப்லு இணையதளத்தில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார். இந்நிலையில் நடிகர் பப்லுவும் அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறப்படும் மலேசிய பெண்ணும் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அப்போது தொகுப்பாளர் பொம்பள சுகம் கேட்குதா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பப்லுவும் ஆம் கேட்கிறது என்று கூறினார். உடனே அருகில் இருந்த இளம் பெண் என்ன என்று கேட்க பப்லு வீட்டிற்கு போய் சொல்கிறேன் என்று கூறிவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியான நிலையில் ஒரு தொகுப்பாளராக இருந்துவிட்டு இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கலாமா என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலரோ 56 வயசில் இந்த சுகம் உங்களுக்கு கேக்குதா என்று இணையதளத்தில் விளாசி வருகின்றனர். மேலும் ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது என்று விமர்சித்து வருகின்றனர்.

Categories

Tech |