Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..! என ஒத்துக்கணும் … C.M ஸ்டாலின் ”YES” என சொல்லணும்…! பிரஷர் போட்ட அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, UPA  அரசாங்கம் ஆட்சி செய்யும் போது, இந்தியாவுல ஒரு சூழல் நடந்துச்சு.  தீபாவளி என்றால் பட்டாசு வெடிக்கும் ஒரு பக்கம். தீபாவளி என்றால் பாம் வெட்டிக்கும் ஒருபக்கம். பெங்களூர்ல, புனேல, டெல்லில எல்லா இடத்திலுமே ஒரு பத்தாண்டு காலம் தொடர்ந்து குண்டு வெடிப்புகள்..  முக்கியமான நாளை சுற்றி இருக்கும். இதையெல்லாம் இந்தியா பார்த்துச்சு.

கொத்து கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். அதில் மிக முக்கியமானது நவம்பர் 26 2008 மும்பை அட்டாக். அதனால் மறுபடியும் தமிழ்நாட்டை தலைநகரமாக வைத்து,  இது இந்தியாவுல ஊடுருவ முயற்சி  பண்றாங்களா ? அப்படிங்கிற கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். அதனால் பத்திரிகை நண்பர்கள் துணிவாக..  இதை நீங்கள் கேள்வி கேட்டு,  இந்த அரசை இது தற்கொலை படை தாக்குதல் என்று சொல்ல ஒத்துக் கொள்ள வேண்டும்.

தற்கொலைப்படை தாக்குதல் என்று ஒத்துக் கொண்டார்கள் என்றால் ? இம்மீடியட்டா இன்னொரு NIA கோயம்புத்தூருக்கு வேணும். இத்தனை ஆண்டு காலம் கடத்தி,  இரண்டு ஆண்டுகள் காலம் கடத்தி,  தமிழக பாரதி ஜனதா கட்சி லெட்டர் மேல லெட்டர் எழுதி,  இப்பதான் NIA போலீஸ் ஸ்டேஷனை டிக்ளர் பண்ணி இருக்காங்க. கிட்டத்தட்ட மூன்று முறை கடிதம் எழுதி இருக்கின்றோம்.

தமிழ்நாடு அரசு இப்பதான் உள்துறை செயலாளரா அவர்கள் அனுமதி கொடுத்து, ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய NIA  stationனை  போலீஸ் ஸ்டேஷன் என்கிற அனுமதி கொடுத்திருக்காங்க. சி.ஆர்.பி.சி பவர்..  கர்நாடகாவில் பெங்களூர்ல போய் பாருங்க. NIA  அவங்களே சொந்தமா fir register பண்ணி, சொந்தமா பண்றாங்க. 16 மாதங்கள் கடந்து..  திமுக ஆட்சி அமைந்து இரண்டு வருடங்கள் கடந்து..

NIA ஒருவரை பிடித்தால் கூட,  லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் போய் தான் அந்த ஆளை  கொடுக்க வேண்டிய சூழ்நிலை…  இத்தன காலமாக இருந்துச்சு. லோக்கல் இருக்கக்கூடிய ஏட்டையாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் என்றால்  தெரியுமா ? NIA என்றால் என்னன்னு தெரியுமா ? ஏட்டையா பார்த்து போடுவது தான் FIR. அப்படி தான் தமிழகத்தை வெச்சிருந்தாங்க. ஆனா இன்னைக்கு தான் மிக கடினமான பிரஷர் போட்டு,  NIA  டிக்ளர் போலீஸ் ஸ்டேஷன் ஒரு வாரத்துக்கு முன்னால வந்து இருக்கு என தெரிவித்தார்.

Categories

Tech |