திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, நான் இன்னும் தைரியத்தோடு சொல்லுவேன். இங்கு ஆண்களை விட பெண்கள் நிரம்ப உட்கார்ந்திருக்கிறீர்கள். ஒரு 50 வருஷத்துக்கு முன்னாடி பாட்டிக்கு 75வது வயசு ஆகுது. ஆரஞ்சு – புடவை பக்கத்துல…. 75 வயசு என்றதும் வெக்கம் வருது.
பாட்டு ஐம்பது வயசுக்கு முன்னாடி இப்படி எல்லாரோடையும் நாற்காலி போட்டு உட்கார முடியுமா ? முடியுமா சொல்லுங்கள் பாட்டி ? முடியாது. 50 வருஷத்துக்கு முன்னாடி முடியாது. 40 வருஷத்துக்கு முன்னாடி இங்க இருக்கிற யாருக்கும் கையெழுத்து போட தெரியாது.
ஆனால் 50, 40யை கடந்து 30 வயசுக்கு மேல இருக்கிறவங்களுக்கு… கையெழுத்து போட தெரியும் உங்களுக்கு… உங்கள் பொண்ணு ஏதாவது ஒரு கம்பெனியில் கிளர்க்காக வேலை பார்த்திருப்பார். உங்க பொண்ணோட பொண்ணு பேத்தி ஐடி கம்பெனில வேலை பார்த்துட்டு இருப்பா.இந்த மூன்றுக்கும் ஆன இடைவெளி இருக்கு இல்ல. இந்த மூன்றுக்கும் ஆன இடைவெளி எப்போது தொடங்கிச்சு என்றால் ? 1989ல் தான் தொடங்கியது.
என்ன தம்பி கதை சொல்றீங்க ? ஆமாம்..! பெரியார் செங்கல்பட்டில் மாநாடு நடத்தினார். அப்போ இப்படி நிறைய பெண்கள் இருக்காங்க. அப்போ ஒரு துண்டு சீட்டில் கேள்வி வருது. நாங்க எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டோம் என்று எங்க கழுத்தில் தாலி இருக்கு. ஆம்பளைங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க என்பதற்கு என்ன அடையாளம் என்ன என பெரியார் கிட்ட ஒரு துண்டு சீட்டு வருது.
பெரியார் சொல்கிறார்… இனிமே நீங்க அவங்களுக்கு தாலி கட்டுங்க. அது அவுங்களுக்கு அடையாளமாய் இருக்குன்னு சொல்லிட்டு, சொல்றாரு பெரியார்…. அடையாளம் என்பது தாலியில் இல்ல.. கல்யாணம் உங்களை மட்டுப்படுத்துவது. நீங்க இன்னும் உயர வேண்டும் அப்படின்னா…. உங்களுக்கு எது வேணும்னா ? பொருளாதாரம் உயர்வு வேண்டும். சொத்துரிமை வேண்டும் என்று உங்களுக்கு குரல் கொடுத்தது பெரியார் என பெருமையோடு தெரிவித்தார்.