செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ராகுல் காந்தி நடை பயணமே ஏன்? காங்கிரஸ் கழுதை தெஞ்சு கட்டெறும்பான மாதிரி தேஞ்சு போச்சு. இன்னைக்கு நீங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உண்மையான நிலை பற்றி நான் சொல்வதை விட என்னுடைய அருமை நண்பர் குலாம் நபி அசாத் ஏற்கனவே 20 ஜி கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் என்ன சொல்கிறார்? ஆமாம் சாமி போடுபவர்களுக்கு தான் காங்கிரஸிஸில் இடம். அதாவது பகல் நேரத்தில் இது இரவு என்று ராகுல் காந்தி சொன்னால் ஆம் என்று சொல்ல வேண்டும். அவர் சொல்லிருக்கிறார், நான் சொல்லவில்லை. அதனால் அந்த மாதிரி சொல்லுற பா. சிதம்பரம், e.v.k இளங்கோவன் போன்ற அடிமைகளுக்கான கட்சியாக அது மாறிவிட்டது.
அது இனி நடை பயணம் செய்தால் என்ன ? செய்யாவிட்டால் என்ன ? இதை நான் சொல்லவில்லை. இதையும் சொன்னது குலாம் நபி அசாத். கட்சியில் இருந்து வெளியே ஒரு ஒருத்தர் போகிறார் என்றால் என்ன காரணத்திற்கு போகிறார் ? என்று சொல்லனுமா வேண்டாமா? நான் இத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.
நான் எட்டு மாநிலத்திற்கு பொதுச்செயலாளர் என்று முறையில் பொறுப்பாக இருக்கிறேன். 8-ல் 7-ஐ ஜெயித்து கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒன்று கூட ஜெயிக்காதவர்கள், இடையில் வெளியே சென்று வந்தவர்கள், அவர் யாரை சொல்கிறார் என்று சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இதே வார்த்தை குலாம் நபி அசாத் சொல்லியிருக்கிறார்.