கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுதலுக்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
காற்றில் உள்ள சிறிய துகள்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவும் என்பது பற்றி ஆதாரத்துடன் கூடிய கடிதத்தை 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு எழுதி உள்ளனர். இதைவைத்து உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை மாற்றம் செய்யும்மாறு அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் வைரஸ் காற்றினால் பரவுவதற்கான சான்றுகள் எதுவும் நம்புவத்ற்குரியதாக இல்லை என ஏற்கனவே சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
தற்போது ஆதாரங்களுடன் கூடிய விஞ்ஞானிகளின் கடிதத்தை ஏற்று , “கொரோனாவை பரப்பும் முறைகளில் ஒன்றாக காற்றின் மூலம் பரவுதல் மற்றும் ஏரோசல் பரவுதல் பற்றி பரிந்துரைகளை வழங்க நாங்கள் ஆலோசித்து வருகிறோம்”. என்று உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தொழில்நுட்ப நிபுணர் மரியா வான் கெர்கோவ் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா காற்றின் மூலம் பரவும் என உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டு இருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.