Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நேற்று மட்டும் 2,035 பேர் பலி….. 4 நாட்களில் 7,852 பேர் மரணம்…. 5 லட்சம் பேருக்கு கொரோனா ..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 4 நாட்களில் மட்டும் 7,852 பேர் உயிரிழந்துள்ளது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

The attack rate is relatively high as there's no immunity to it ...

 

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,699,631 பேர் பாதித்துள்ளனர். 102,734 பேர் உயிரிழந்த நிலையில், 376,327 பேர் குணமடைந்துள்ளனர். 1,170,740 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 49,830 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

Coronavirus Outbreaks at China Prisons Spark Worries About Unknown ...

 

கொரோனா வைரசால் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில்  மட்டும் 2,035 பேரை இழந்து அமெரிக்கா அடி ஆடி போயுள்ளது. இதனால் கொரோனா  தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18,747ஆக அதிகரித்துள்ளது. 502,876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 27,314 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 456,815 மருத்துவமணையில் இருக்க்கும் நிலையில் 10,917 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது.

Trump World and Senate GOPers Want to Jam Pelosi on Coronavirus ...

அங்கு 7ம் தேதி 1973 பேரும், 8ம் தேதி 1943 பேரும், 9ம் தேதி 1,901 பேரும், 10ம் தேதி 2035 பேரும் உயிரிழந்துள்ளதால் கடந்த 4 நாட்களில் மட்டும் 7,852 பேர் உயிரிழந்துள்ளனர். இது அமெரிக்கா நாட்டையே கதி கலங்கவைத்துள்ளது.

Categories

Tech |