Categories
அரசியல் மாநில செய்திகள்

“நேற்று பிரதமர், இன்று அமித்ஷா”…. பாஜக போட்ட பக்கா பிளான்…. தமிழகத்தில் விரைவில் மலரும் தாமரை….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். நேற்று பிரதமர் மோடி தமிழக வந்த நிலையில் நாளைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகிறார். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கேட்டால் பாஜகவின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் 2 முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து 2 நாட்களில் தமிழகம் வருவது தான் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது பாஜக வடக்கில் வெற்றி பெற்றாலும் தெற்கில் அவர்களால் வெற்றி கொடியை நாட்ட முடியவில்லை.

இதில் தமிழகமும் ஒன்று. திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்தில் தாமரை மலர்வதில் சிக்கல் இருக்கிறது. இதனால் தான் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தற்போது இருந்தே வெற்றி பெறுவதற்கான வியூகங்களை பாஜக வகுத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் பாஜக சார்பில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது டார்கெட் சவுத் என்ற திட்டத்தை களம் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்படி தெற்கில் வலுவிழந்து காணப்படும் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி தாமரையை மலர செய்ய வேண்டும் என்பதுதான்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்று டெல்லியின் கவனத்தை திருப்பியது. இருப்பினும் இந்த வெற்றி போதாது. இன்னும் கூட பல  இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் பாஜகவும் நிலையான கட்சி என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்பதில் தான் தற்போது பாஜக மேலிடம் அதி தீவிரமாக இருக்கிறதாம். தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் இருந்தாலும் கூட தற்போது இருந்தே சரியான வியூகங்களை வகுத்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் தான் மத்திய அமைச்சர்கள் கூட அடிக்கடி தமிழகம் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்களின் வருகையால் தமிழகத்தின் மீது மேலிடத்திற்கு மிகுந்த அக்கறை இருக்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்களாம். மத்திய அமைச்சர்களின் வருகை மற்றும் உள்துறை அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வருகையின் மூலம் தமிழக மக்களின் மனதை வென்று அடுத்த தேர்தலில் 8 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் டார்கெட் என்று கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் தான் என்னென்ன அரசியல் வியூகங்கள் நடக்கப் போகிறது அல்லது புதிதாக ஏதேனும் அரசியல் நடக்கப் போகிறதா என்பது தெரியும்.

Categories

Tech |