திருப்பத்தூர் மாவட்டம் மேம்பட்டி சமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்(29) வாணியம்பாடி புதூர் பூங்குளம் பகுதியை சேர்ந்த சுமித்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் திருமணம் ஆன முதல் நாளே ராமதாசும் சுமித்ராவும் ஆம்பூர் அடுத்த வீரர் கோயில் பகுதியில் அமைந்துள்ள சென்னை- பெங்களூர் செல்லும் ரயில்வே மார்க்கத்துக்கு சென்றுள்ளனர்.
பின்னர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்பு இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளனர்.
அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீதும் ஏறியதால் உடல் துண்டாகி ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.