தேவையான பொருட்கள்:
1.சிறிய தட்டு
2.சிறிதளவு கல் உப்பு
3.கனிந்த எலுமிச்சைப்பழம் ஓன்று
4.கத்தி
5.பிளாஸ்டிக் பை
எவ்வாறு இவைகளை கொண்டு செய்வது.?
எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு நான்கு துண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். முழுவதுமாக வெட்டக் கூடாது, அடிப்பகுதியில் நான்கு முனைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவாறு இருக்க வேண்டும். உப்பை தட்டில் பரப்பி வைக்க வேண்டும். உப்பின் நடு பகுதில் வெட்டப்பட்ட எலுமிச்சம் கனியை வைத்து விடுங்கள். வீட்டில் உங்களின் கட்டிலுக்கு அடியில் அல்லது வீட்டின் நடுவில் வைத்துவிட்டு ஒரு இரவு முழுவதும் எதுவும் செய்ய கூடாது.
இரவு நீங்க எந்த இடத்தில் வைக்கிறீர்களோ அந்த இடத்திலேயே இந்த தட்டு அப்படியே இருக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எக்காரணம் கொண்டும் இந்த உப்பையும் எலுமிச்சை பழத்தையும் தொடாமல், நீங்கள் எடுத்து வைத்துள்ள பிளாஸ்டிக் பையில் இதனை கொட்டி சாதாரணமாக ஒரு மூடிபோட்டு யார் கண்ணிலும் படாதவாறு தூக்கி வீசி விடுங்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகி நல்ல நேர்மறை சக்தி அந்த இடத்திலே நிலவும்.
இந்த பரிகாரத்தை செய்ய நிச்சயமா செய்தால், வீட்டில் பணம் பெருகும், வீன் செலவு ஆகாது. வீட்டில் இருக்கக் கூடிய வறுமை நிலை நீங்கி, உடல் நிலை மோசமாக இருந்தால் அதுவும் குணமாகி, கட்டாயமாக வளமான வாழ்வு உங்களுக்கு உண்டாகும். இதை நீங்கள் வாரத்துக்கு ஒருமுறை செய்யலாம். செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செய்தால் நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.