தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா ஆகும். அந்த நகரில் கடந்த 18 ஆம் தேதி தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக அந்த நகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கினால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் இன்னும் சிலர் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மீட்புக்குழுவினர் அவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.