தமிழகத்தில் பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரை நாளை நிறைவு பெற உள்ள நிலையில் அனுமதி வழங்கப்படாது என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அனைத்தையும் தாண்டி பாஜகவினர் யாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்து கடவுளையும் கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து நாளை திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெற உள்ள நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஆனால் நாளைய யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படாது என தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் கூறியுள்ளார். இது தமிழகம் முழுவதிலும் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.