- யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.
- யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் சுவாச குழாய் ஒழுங்காக இயங்கும்.
- யோகா பயிற்சியை தினமும் தவறாமல் செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
- யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள் ஆனால் அது மிகவும் தவறு எத்தனை நிமிடங்களுக்கு யோகாசனம் செய்கிறீர்களோ அதை பொருத்து உங்களுடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைத்து உடல் பருமனை குறைக்கும்.
- உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு யோகாவில் இருக்காது என்பது உறுதி.
- யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.