Categories
மாநில செய்திகள்

யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம்… சென்னையில் திறப்பு..!!

சென்னையில் இன்று யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் சைதாப்பேட்டையில் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதம் போன்றவற்றுக்கான சிகிச்சை மையங்களும் திறக்கப்பட்டு வருகின்றது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னையில் முதன்முதலாக யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் ஒன்று சைதாப்பேட்டையில் 120 படுக்கை வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கி இந்த மையத்தை திறந்து வைத்தார்.

Categories

Tech |