Categories
அரசியல்

யோகா செய்யும்போது இதெல்லாம் பாலோவ் பண்ணுங்க…. இதோ சூப்பர் டிப்ஸ்….. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

யோகா என்பது ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சி ஆகும். அத்துடன் நம்முடைய உடலுக்கும், மனதிற்கும் நன்மை கொடுக்கும் ஒருபயிற்சியாக யோகா இருக்கிறது. அதே சமயம் யோகாவை தவறாக செய்யும்போது, அதனால் சில எதிர்மறையான பாதிப்புகளை நாம் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே யோகா செய்வதற்கு முன் இந்த 4 விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லதாகும். தினமும் யோகா செய்பவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். மேலும் மனஅமைதி மற்றும் புத்துணர்ச்சியை பெற யோகா உதவியாக இருக்கிறது.

சிலசமயங்களில் நாம் அதிகளவு யோகா பயிற்சிகளை மேற்கொள்கிறோம். இதன் காரணமாக நீங்கள் அதிகமாக சோர்வடைய வாய்ப்பு உள்ளது. இதில் யோகாவைக் கவனமுடன் மற்றும் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டியது முக்கியமானது ஆகும். எதாவது ஒரு யோகாமுறையை தவறாக செய்யும் போது, அதனால் உங்கள் உடலில் பாதிப்புகள் ஏற்படலாம். சில பேருக்கு யோகா செய்யும் போது அதிகளவு வலி ஏற்படலாம். தற்போது யோகா செய்யும் போது நாம் கவனிக்கவேண்டிய விஷயங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

​தவறாக செய்தல்யோகாவை பொறுத்தவரையிலும் ஒவ்வொரு ஆசனத்திற்கும் ஒரு உடல் வடிவம் உண்டு. அதனை சரியாக செய்யும்போது நம் உடல் ஆரோக்கியத்தில், அவை பல நன்மைகளை செய்யும். அதே சமயம் அதை சரியான ஆசிரியர் இல்லாமலோ (அல்லது) அனுபவம் இல்லாமலோ தவறாக செய்யும்போது, உடலில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக நீங்கள் சோர்வாக உணரலாம். ஒரு பயிற்சியினை தவறாக செய்யும்போது அது செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். அவ்வாறு இருக்கும் சமயத்தில் அப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். மேலும் உடலின் சுவாசம் மற்றும் இயக்கத்தை பாதிக்கும் எவ்வித பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டாம். முடிந்தவரையிலும் யோகா ஆசிரியரை கொண்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

​உடல் வலுவை இழந்தால் பயிற்சியை நிறுத்த வேண்டும்:

யோகாபயிற்சி செய்யும்போது ஒருசில செயல்களில் நாம் கவனத்துடன் இருப்பது முக்கியமானது ஆகும். சாதாரணமாக யோகா செய்யும்போது உடல் சோர்வடைவது என்பது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு உடல் சோர்வடைந்த பிறகும் கூட சிலர் விடாமல் யோகா முறைகளை செய்கின்றனர். அவ்வாறு செய்யும்போது நம் உடலானது யோகா செய்வதற்கு ஒத்துழைக்காது. அந்த அளவுக்கு சிரமப்பட்டு யோகாவை செய்ய வேண்டிய தேவையில்லை. உடல் ஒத்துழைக்காத சமயத்தில் யோகா செய்வதை நிறுத்தி விடலாம்.

​உடல்வலி

உண்மையில் பிற பயிற்சிகளை போன்று யோகா உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய பயிற்சி கிடையாது. அது உடலுக்கும், மனதிற்கும் அமைதியை அளிக்கக்கூடியது ஆகும். சரியான வழிகாட்டுதலின் படி நீங்கள் யோகா முறைகளை செய்கிறீர்கள் என்றால், அது உங்கள் உடலில் வலி இல்லாமலே பயிற்சி செய்வதற்கு உதவும். ஒருவேளை நீங்கள் யோகா செய்கையில் உங்களது உடலில் வலியை உணர்கிறீர்கள் என்றால் அதனை கண்காணித்து, உங்கள் உடல் மற்றும் திறனுக்கு ஏற்றவாறு எளிய ஆசனங்களைச் செய்வது நல்லது ஆகும்.​

யோகாவிற்குப் பின் மூச்சுத்திணறல்

யோகா பயிற்சியை உங்களது சுவாசத்துடன் இணைப்பது என்பது முக்கியமான விஷயம் ஆகும். சாதாரணமாக யோகா பயிற்சிகளை செய்கையில் அது உங்களுக்கு எவ்வித மூச்சு பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. எனினும் சில கடுமையான யோகா முறைகளை நீங்கள் செய்யும்போது, சில நேரங்களில் உங்களுக்கு மூச்சுதிணறல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற சமயங்களில் யோகா செய்வதை நிறுத்தவேண்டும். அத்துடன் மூச்சுத்திணறல் குறித்த பிரச்சனைகள் இருப்பவர்கள் கடும் யோகா முறைகளை தவிர்ப்பது நல்லது ஆகும்.

Categories

Tech |