Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

யோகா TEACHER மர்ம சாவு….. வேறு பெண்ணுடன் தொடர்பு…. மருமகனை கைது பண்ணுங்க…. மாமியார் புகாரால் பரபரப்பு…!!

வேலூர் அருகே மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் காவல் நிலையத்தில் மருமகன் மீது புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவிதா என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சி பள்ளி ஒன்றில் யோகா ஆசிரியர் பணி கிடைத்தது. இந்நிலையில்  அதே பகுதியில் தங்கி பணிபுரிந்து வர, கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்,

நேற்றையதினம் மர்மமான முறையில் ஜீவிதா இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திலும், ஜீவிதாவின் தாயாரிடமும் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு சென்று கண்ட தாய்  எனது மகள் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும்,அதனை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,

எனது மருமகனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. அதை மறைக்க வீட்டில் இருந்து பணம் பெற்று வருமாறு தினமும் அடித்து சித்திரவதை செய்துள்ளார். தற்போது எனது மகள் திடீரென மர்மமான முறையில் இறந்து இருக்கிறார். எனவே இறப்பில் சந்தேகம் எனக்கு உள்ளது. எனவே மறுமகனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |