யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகெங்கும் புகழ் பெற்ற யோகாசனக் கலை 5000 வருடங்கள் பழமையானது ஆகும். இது இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையாகும். இது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமாக இருப்பதால் உலக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக முதன்முறையாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளனர். யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அரசு அங்கீகரித்ததன் மூலம் உலகம் முழுக்க சென்றடையும். மேலும் நம்முடைய பாரம்பரியத்தை பல நூற்றாண்டுகளாக யோகாசன போட்டிகள் நடந்து வந்திருப்பதாகவும், இதை விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்க தெளிவான ஆலோசனைக்கு பிறகே அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்ரீபத் நாயக் கூறியுள்ளார்.