இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் உத்திரப்பிரதேசம் தான் என பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி 20 வயது பட்டியலின பெண் ஒருவரை உயர் சாதியைச் சேர்ந்த சில கொடூர வாதிகள் வயலுக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு கொடூரமாக வெட்டப்பட்டு மூச்சு விடக்கூட முடியாத நிலையில் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பல அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது,
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் நடந்த வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 வயது பெண் டெல்லி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். “பெண்களுக்கு பாதுகாப்பான எந்தவொரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது யோகி ஆதித்யநாத்-இன் உத்திரப்பிரதேசம் தான்” என்று பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.