யோகி பாபு தற்போது அவர் கைவசம் 18 படங்களுக்கு மேல் வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி காமடி நடிகர். தற்ப்போது இவர் காமெடியுடன் கூடிய கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடித்த ‘தர்மபிரபு’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது,மேலும் இதை தொடர்ந்து ‘கூர்கா’, ‘ஜாம்பி’ போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் புதிதாக கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறாராம். இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்திற்கு பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார், ராஜசேகர் இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையன்றுவெளிவரும் வெளிவரும் என்று தயாரிப்பு குழு அறிவித்துள்ளது. அந்த நாளில் தான் ரஜினியின் தர்பார் படமும் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.