Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கழிப்பறைக்கு அனுமதி…. கொஞ்சம் தண்ணீர்….. இதுவே பேருதவி….. யோகிபாபு கருத்து….!!

பெண் காவலர்களுக்கு உதவி செய்யுமாறு பிரபல நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா அச்சத்தால் 144 தடை விதிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். மக்கள் 144 தடை உத்தரவை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா என்பதை பார்வையிடும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இடைவிடாது தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

நடிகர் யோகிபாபு காவலர்களின் பணி குறித்து கருத்து தெரிவித்தார். நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்காக அவர்கள் சாலையில் வெயிலில் நின்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை உணர்ந்து அவர்களது நாம் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மேலும் பெண் காவலர்கள் உங்கள் வீட்டருகில் கண்காணிப்பு பணியில் இருந்தால் அவர்களுக்கு உங்கள் வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியுங்கள் என்று யோகிபாபு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வீட்டருகே இருக்கும் காவலர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள். இதுதான் தற்போதைய சூழ்நிலைக்கு நாம் செய்யக் கூடிய பேருதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |