பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் யோகிபாபு நடிக்கயிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வளர்ந்து வருபவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் சூப்பர் ஹிட் படமான ”கோமாளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடித்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, இவர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
A warm welcome to @iYogiBabu aboard #Ags22 @pradeeponelife @aishkalpathi @Ags_production @thisisysr #SathyarajSir #KalpathiAghoram #KalpathiGanesh #KalpathiSuresh @venkatmanickam5 @onlynikil pic.twitter.com/ucAk5TMIYX
— Archana Kalpathi (@archanakalpathi) January 1, 2022