Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டு பேய் காதலை சேர்த்து வைக்கும் யோகிபாபு…!!

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘பியார்’ படத்தில் யோகிபாபு பேய்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ராகவா லாரன்சின் உதவி இயக்குனரான மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் சண்டி முனி. இப்படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார் ‘பியார்’ என்ற புதிய படத்தை இயக்கஉள்ளார். இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இவருடன்  வாசு விக்ரம், ஆர்த்தி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கஉள்ளார். இது ஒரு காதலுடன் கூடிய நகைசுவை கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும்.

Image result for யோகிபாபு

மேலும் எஸ்.செல்வகுமார் கூறுகையில், வழக்கமாக இருவர் காதலித்தால் கதாநாயகன் தான் சேர்த்து வைப்பார்கள் ஆனால் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு இரண்டு பேய்கள் காதலிக்கின்றனர் இவர்களை யோகிபாபு சேர்த்துவைக்கிறார். இது தான் இந்த படத்தின் கதை. இதை பேய்காதல் என்று கூறலாம். இந்த படத்தை வி.பாலகிருஷ்ணன், ஆர்.சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஊட்டி குன்னூர் பழனி போன்ற இடங்களிலும் தொடங்கயிருக்கிறது.

 

Categories

Tech |