Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு உத்தரவு – சுவாரஸ்யமான பழைய படங்கள்.. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் யோகி பாபு..!!

ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் யோகி பாபு, சுவாரஸ்யமான பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார்.

வீட்டில் இருப்பது பற்றி நடிகர் யோகி பாபு கூறியது, வீட்டில் அம்மா, தங்கை, மச்சான், தம்பி இவர்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு மனம்விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பம் இப்பொழுது கிடைத்துள்ளது. தினமும் ஷூட்டிங் என மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த நான், இப்பொழுது என்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

விசுவின் சம்சாரம் அது மின்சாரம், சிவாஜியின் கர்ணன், கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் போன்ற சுவாரஸ்யமான  நிறைய பழைய படங்களை பார்த்து ரசித்தேன். பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சினிமா தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் நடைபாதை வியாபாரிகள் உள்பட அனைவரும் கஷ்டப்படுகிறார்கள்.

அவர்களுக்கு என்னால் முடிந்த  உதவிகள் செய்து வருகிறேன். வீட்டிற்குள் அனைவரும் சந்தோஷமாக இருந்தாலும் கூட, நாட்டில் உயிரை குடிக்கும் கிருமி பரவிக் வருகிறது. அதை சமாளிப்பதற்காகவும், நாம், நம்முடைய குடும்பம, நாட்டு மக்கள் என அனைவரின் நன்மைக்காகவும் தனித்திருப்போம்.

 

 

Categories

Tech |