Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்… விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்… போலீசார் நடத்திய முகாம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் சார்பில் குறைதீர்க்கும் முகாம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற குற்றங்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காவல்துறையினர் சார்பில் குழந்தை திருமணம், இணையதள குற்றங்களுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் குறைதீர்த்தல் முகாம் நடைபெற்றுள்ளது. இதில் திருச்செங்கோடு உட்கோட்ட பகுதிகளில் உள்ள காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கலந்துகொண்ட பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த கூட்டத்தில் பேசிய அவர் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம் ஆகியவற்றிற்கு 1098, 155260, 181 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகள் மற்றும் ஆபாச புகைப்படம், வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டிருந்தால் cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார்களை அளிக்கலாம். மேலும் வங்கி கணக்கு எண் குறித்த விவரங்கள் ஏ.டி.எம் ரகசிய எண் போன்ற விவரங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரேனும் கேட்டால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என சூப்பிரண்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் இவர்களை பற்றி புகார் அளிப்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர். எனவே பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே குற்றங்களையும் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார்.

Categories

Tech |