Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… முதலைக் கறியை ரசித்து ருசித்து சாப்பிடும் நீயா நானா கோபிநாத்….. வைரலாகும் வீடியோ…. ரசிகர்கள் ஷாக்….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்துக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். அதன் பிறகு நல்லதா நாலு விஷயம் சொல்வோம் என்ற தலைப்பில் சில அட்வைஸ் வீடியோக்களை கோபிநாத் வெளியிட்டு வருவார்‌. அதோடு தன்னுடைய பர்சனல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

இந்நிலையில் கோபிநாத் தற்போது தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் முதலைக் கறியை வாங்கி சாப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் முதன்முதலாக முதலைக்கறி என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அதை பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Gobinath (@gobinathsocial)

 

 

 

Categories

Tech |