Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க 1…… நாங்க 5….”திமுகவை ஊதி தள்ளும் அதிமுக”…. கெத்து காட்டும் EPS …!!

பேரறிஞ்சர் அண்ணா_வின் பிறந்த நாளின் அதிமுகவின் பொதுக்கூட்டத்தால் திமுக முணுமுணுத்து வருகின்றது.

மத்திய அரசு ஜம்மு_க்கு வழங்கி இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்து புதிய சட்டம் சோதாவை நிறைவேற்றியது. இதற்க்கு பாஜகவின் எதிர் நிலைப்பாடு வகித்து தேர்தலை சந்தித்த பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும் திமுக , காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியளவில் பெரிய எதிர் கட்சி மற்றும் பாஜகவிற்கு அடுத்தபடியாக உள்ள தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸை விட திமுக கடுமையாக எதிர்த்து.

குறிப்பாக ஜம்முவில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி அங்கு சிறைபிடித்துள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டுமென்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும் அதில் தேசியளவிலான அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்தது.காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டியதை நேர்த்தியாக திமுக செய்தது தேசிய அரசியலில் ஸ்டாலினை ஒரு தளபதியாக காட்டியது.

திமுக_வின் டெல்லி ஆர்ப்பாட்டத்தை விட்டு வைக்காத தமிழக அமைசர்ககள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததோடு திமுக பிரிவினையை ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் திமுகவின் டெல்லி ஆர்ப்பாட்டத்தை உற்று நோக்கிய எடப்பாடி திமுகவிற்கு தக்க பதிலடி கொடுக்க காத்திருந்தார்.

இந்த நிலையில் தான் வருகின்ற 15_ஆம் தேதி பேரறிஞ்சர் அண்ணா_வின் பிறந்த நாளை திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு போட்டியாக டெல்லி உட்பட 5 மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.அதிமுகவின் இந்த நகர்வை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத திமுக செய்வதறியாமல் முணுமுணுத்து வருகின்றது.உலக முதலீட்டாளர்களை ஈர்க்க சென்ற எடப்பாடி அங்கு கோர்ட் சூட் போட்டு அசத்திய நிலையில் அதே உற்சாகத்துடன் தற்போது திமுகவை வேட்டையாடும் பணியில் எடப்பாடி இறங்கியுள்ளார்.

Categories

Tech |