தன்னை விட 20 வயது குறைந்த இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட நபர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்
அமெரிக்காவை சேர்ந்த மார்க்யூஸ் என்ற 39 வயது பாடகர் தன்னை விட 20 வயது குறைவான இளம்பெண்ணை எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மார்க்யூஸ் தனது சமூக வலைதளப் பதிவில், “இதை இன்னும் என்னால் நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது. உன்னை திருமணம் செய்ததால் எனது கனவு நனவாகியுள்ளது. உன்னை திருமணம் செய்த தருணம் எனது உடல் அதிக அளவு நடுங்கியது மியா.
அச்சமயத்தில் செய்வதறியாமல் ஒரு குழந்தையைப் போல நான் அழுதேன்” என பதிவிட்டிருந்தார். மியாவும் மார்க்யூஸும் சுமார் ஆறு மாதங்கள் டேட்டிங்கில் இருந்த பின்னர் சென்ற வருடம் மார்ச் மாதம் அவர்களின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரிடையே 20 வயது வித்தியாசம் இருந்ததால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது பற்றி எல்லாம் கவலை பட போவதில்லை என இத்தம்பதி கூறியுள்ளது