Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பேசுவதையே புடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது பாய்ந்த சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணன் ஆ.ராசா பேசிட்டாருன்னு கொந்தளிக்கிறாங்க. நம்ம அப்பா எல்லாம் படிக்கும் போது இவர் உழவன், ஏர் ஊழுகிறான், இவன்  வண்ணான்,  துணி துவைக்கிறான், இவன் குயவன்,  பானை செய்கிறான். இவர் ஐயர்,  மிகவும் நல்லவர், பாடம் படிக்கிறார்  அப்படின்னு புத்தகம் இருக்கு.

இப்பவும் அதே தான். இதுதான்  சனாதான தர்மம், சனாதன கோட்பாடு அப்படின்னு சொல்லுறாங்க இல்ல. அந்த கர்மம் தான் இது. இதை என்ன செய்வது ? மணலை அள்ளி வித்துக்கிட்டு இருக்கான். நீர் உறிஞ்சி விற்கப்படுகிறது,  நிலமெல்லாம் குப்பைமேடாக இருக்கிறது. இது பற்றி எந்த பிரச்சனையும் எடுத்துப் பேசாமல், ஆ.ராசா பேசுவதையே புடிச்சு தொங்கிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் ? என தெரிவித்தார்.

தயவுசெய்து பாஜக சிறையை நிரப்பட்டும் 9 சிறை நிரப்பும் போராட்டத்தில்) நிறைய சிறை இருக்கு.  போய் இருங்க. அதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே… முதல்ல அண்ணாமலைக்கு ஆ.ராசா பேசுனதுல உடன்பாடு இருக்கா ? இல்லையா ? முதலில் சொல்லுங்க. நீங்க…  உங்க தர்மம்,  உங்க மனதர்மம் எழுதி வைத்திருப்பதை தான் அவர் சொன்னாரு. அதை இல்லைன்னு மறுக்கிறீர்களா ? அப்போ எதுக்கு அவருக்கு எதிராக போராடுனீங்க என தெரிவித்தார்.

Categories

Tech |