Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்களே… பெண்களை போல நீங்களும் சர்மத்தை பாதுகாக்கிறீர்களா…? இனிமே கட்டாயம் செய்யுங்கள்..!!

தற்போது காலகட்டத்தில் ஆண்களும் பெண்களைப் போலவே தங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆண்களுக்கு  எளிமையான பராமரிப்பு இருந்தாலே போதும்.

சருமத்தைப் பாதுகாக்க விரும்பும் ஆண்கள் இதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. நல்ல சரும பராமரிப்பு எப்போதும் சருமத்தை பொலிவாக வைத்திருக்க செய்யும். தினமும் சில நிமிடங்கள் செலவு செய்தாலே போதும். பெண்களைப் போன்று சருமத்தின் ஒவ்வொரு அடுக்கும் தனிப் பராமரிப்பு தேவையில்லை. ஒரு வயதான தோற்றத்தை தடுக்க அன்றாட பராமரிப்புகளை போதுமானது.

சரும நீரோட்டம்:

சருமம் நீரோட்டமாக இருப்பது செரிமானம் மற்றும் ரத்த ஓட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக பளபளப்பாக வைக்க உதவுகிறது. நீரேற்றமாக இருக்கும் போது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற செய்யும் போதுமான தண்ணீரை குடிப்பது சருமத்தைப் புதுப்பிக்க செய்கிறது.

மாய்ஸ்சுரைசர்:

பெண்கள் மட்டும்தான் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும் என்பது தவறான குறிப்பு. ஆண்களும் சருமத்தின் ஈரப்பதத்தை இழக்காமல் இருக்க்க காலையிலும் இரவும் மாய்சுரைசர் பயன்படுத்துவது நல்லது. இது வயதான அறிகுறிகளை தவிர்க்க செய்யும். மாய்ஸ்சுரைசர் இதை பயன்படுத்தும் பொழுது நாள் முழுவதும் சருமம் மென்மையாக இருக்கும். எண்ணெய் பசை இல்லாமல் சருமம் பளபளப்பாக இருக்கும்.

சன்ஸ்கிரீன்:

சருமத்திற்கு தீங்கு நேராமல் காக்கும் சன்ஸ்கிரீன் பெண்களைப் போன்று ஆண்களும் பயன்படுத்தலாம். ஆண்கள் தான் அதிகம் வெளியில் செல்வதால் அவர்கள் பயன்படுத்துவது நல்லது. வெளியில் செல்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் வராமல் தடுக்கலாம்.

சருமத்தை தொடாதீர்கள்:

சருமத்தின் ஆரோக்கியம் கெடுப்பதில் முக்கியமானது  வெளியிலிருந்து வரும் தூசுகள். கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் கிருமிகள். முகத்தை அடிக்கடி கைகளால் விரல்களால் தேய்க்கும் பழக்கம் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிகம். அவ்வப்போது முகத்தை தேய்க்கும் போது தன் கைகளில் இருக்கும் அழுக்கு எண்ணெய் மற்றும் பாக்டீரியா சருமத்துளைகள் ஊடுருவி முகப்பருக்களை உருவாக்கும். இதனால் முகத்தை அடிக்கடி கைவிரல்களால் தேய்க்காமல் இருப்பது நல்லது.

உணவில் கவனம்:

ஆண்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துவதில்லை. வெளி உணவுகளில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உணவில் சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள், கொட்டைகள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்தான உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தூக்கம் அவசியம்:

தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். ஏனெனில் தூக்க முறைகள் சருமத்தில் நிறைய மாற்றத்தை உண்டாக்கும். சரியான நேரத்தில் தூக்கத்தை கடைபிடிப்பது ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும். தூங்கும் நேரத்தில் ரத்த ஓட்டத்தை சீர்செய்வதால் சரும செல்கள் உருவாகிறது. இது நம் தோலை பராமரித்து சீராக வைக்க உதவுகிறது.

Categories

Tech |