தனது வேலை பறிபோனதற்கு காரணமாக இருந்தவரை மது வாங்கி கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை இரும்புலியூர் பக்கத்தில் உள்ள ஏரிக்கரை பக்கத்தில் முதியவரின் சடலம் ஒன்று வெட்டப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இறந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த ஜான் ராஜாசிங் என்பவரும் அவர் படைப்பை வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ராஜாசிங் கடைசியாக தன்னுடன் வேலை பார்த்த கோவில் ராஜ என்ற வாலிபருடன் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கோவில் ராஜாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஜான் ராஜாசிங்கை தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். வேலை செய்த இடத்தில் கடை உரிமையாளரிடம் ஜான் ராஜாசிங், கோவில் ராஜாவை பற்றி தவறாக கூறியதால் அவனை வேலையை விட்டு அனுப்பி விட்டனர். இதனால் வேலை இழந்து வருமானமின்றி செலவு செய்ய பணம் இல்லாமல் கோவில் ராஜா மன உளைச்சலில் தவித்து இருந்துள்ளார். இதனால் வேலை பறிபோக காரணமாக இருந்த ராஜசிங்கிற்கு மது வாங்கி கொடுத்து வெட்டி படுகொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.