Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க கவர்மெண்ட்டா இல்லை… கந்துவட்டி கடையா? உனக்கு என்ன வேலை ? சீமான் காட்டம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ஆவின் பால்பாக்கெட்டில் அளவு குறைவாக இருந்தது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர்,

நீங்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் சொல்லிக் கொள்வதும், பேசிக்கொள்வதும் நடக்கிறது. அம்மையார் நிர்மலா சீதாராமன் பேசும்போது,  நாங்கள் வந்து இரண்டு முறை விலையை குறைத்தோம், ஏற்றியது யார் ? விலையை ஏற்றியது நீங்கள் அல்லவா எதற்கு குறைத்தீர்கள் ?  மக்களால் இந்த வரிச்சுமையை தாங்க முடியாது, இந்த விலை ஏற்றத்தை தாங்க முடியாது மக்களால் அப்படி என்று நீங்கள் குறைக்கிறீர்கள் என்றால்…..

தாங்க முடியாது என்று தெரியும்போது எதற்கு ஏற்ற வேண்டும் ? இது எந்த மாதிரியான நிர்வாகம்…. நாங்கள் அமைதியாக போராடாமல் இருந்திருந்தால் நீங்கள் விலையை குறைத்து இருப்பீர்களா? ஐந்து மாநில தேர்தல் வரவில்லை என்றால் நீங்கள் விலையை குறைத்து இருப்பீர்களா? மத்திய அரசு சொல்வதில் ஒரு நியாயம் இல்லை.

முதலில் வரியிலே எனக்கு உடன்பாடு இல்லை. பிள்ளைகள் எழுதுகின்ற தேர்தெழுவுகின்ற பென்சில். ரப்பர். மாற்றத்திறனாளிகள் பயன்படுத்துகின்ற சக்கர வண்டி. மாற்று திறனாளிகள் எழுதி படிக்கின்ற தாள். செவித்திறன் கருவி… அதற்கெல்லாம் வரி போட்டதெல்லாம் மிகவும் சரியாக இருக்கிறதா?வரி என்பது…..

நீங்கள் மன்னர் ஆட்சி காலத்திற்கு போனாலும், அரசிடம் தான் நிலம் இருக்கும். உழைப்போம், அவர்களுக்கு தேவையானது போக களஞ்சியத்தில் வைத்து சேமிப்போம், பேரிடர் காலங்களில் வேளாண்மை போய்த்துப்போன காலங்களில் மக்களுக்கு திருப்பி கொடுப்போம் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், வரி என்பது….. நீங்கள் மன்னர் ஆட்சி காலத்திற்கு போனாலும், அரசிடம் தான் நிலம் இருக்கும். உழைப்போம், அவர்களுக்கு தேவையானது போக களஞ்சியத்தில் வைத்து சேமிப்போம், பேரிடர் காலங்களில் வேளாண்மை போய்த்துப்போன காலங்களில் மக்களுக்கு திருப்பி கொடுப்போம்.

அப்படித்தான் உலக நாடுகள் எல்லாம் வரியை 100 ரூபாயில் 70 ரூபாய் எடுத்துக் கொண்டாலும் 70 ரூபாய்க்கு இணையானதை திருப்பிக் கொடுக்கிறது. உயர்ந்த கல்வி, உயர்ந்த மருத்துவம், தூய குடிநீர், தடையற்ற மின்சாரம், பயணிக்க சரியான பாதை அப்படியே திருப்பிக் கொடுக்கிறது. அப்படி என் நாடு செய்கிறதா?

நாங்கள் ஒவ்வொரு ஆண்டும்,  ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பணத்தை நாங்கள் திருப்பி கொடுக்கிறோம். ஏன் இங்கிருந்து எடுத்துகிட்டு போகிற ? ஏன் திருப்பி கொடுக்கிற, உனக்கு வேற வேலை இல்லையா ? நீங்கள் கவர்மெண்ட்டா இல்லை… கந்துவட்டி கடையா? உனக்கு என்ன வேலை ? என கடுமையாக விமர்சித்தார்.

Categories

Tech |