Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மனிதரே அல்ல, கடவுள்…! நடிகை கங்கனா ட்விட்…!!

நடிகை கங்கனா விஜய்யை கடவுள் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் நடிகைகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தற்போது பல படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படமும் எடுக்கப்பட்டு வருகிறது. “தலைவி” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார்.

எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் உடன் பணியாற்றிய அனுபவத்தை நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள விஜய் சார். தலைவி படத்தின் முதல்பாதி டப்பிங் பணி முடிந்தது. இன்னும் பாதி மட்டுமே மீதம் இருக்கிறது.

அதன் பிறகு நமது பயணம் முடியப் போகிறது. நான் நன்றாக நடிக்கும் போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். உங்களிடத்தில் ஒரு கோபத்தையோ, அச்சத்தையோ நான் பார்த்ததில்லை. நீங்கள் மனிதரே அல்ல. கடவுள். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று பதிவிட்டுள்ளார்

Categories

Tech |