நடிகர் ரஜினியின் அரசியல் குறித்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் , நாம் கொண்டாடலாம் என தவமாய் தவம் கிடந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போடும் வகையில் மக்கள் புரட்சி , எனக்கு பதவி ஆசை இல்லை என்றெல்லாம் அதிரடி அரசியல் பேச்சு பேசினார். 45 நிமிடம் வரை கட்சி இப்படி தான் இருக்கணும் , அமைச்சர்கள் இப்படி தான் தேர்வு , இவ்வ்வாறு தான் செயல்படனும் என்று அதிரடியை சீறிய ரஜினி கடைசிவரைக்கும் அரசியலுக்கு வருவதை உறுதி செய்யாமல் பேட்டியை முடித்து விட்டார்.
தமிழகத்தில் திராவிட அரசியல் ஒழிய வேண்டும் என்றால் மக்கள் புரட்சி வர வேண்டும் , அது வரட்டும் நான் ஆட்சிக்கு வருகின்றேன் என்று பேசினார். அரசியல் மாற்றம் , அமைப்பு மாற்றம் என அனைத்திலும் பேசி கடைசியில் அரசியல் அறிவிப்பு இல்லையே என்று ஏங்கி கொண்டு இருந்த நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்து ரஜினி ரசிகர்களை ஆத்திரமூட்டியுள்ளது.
இதில் ரஜினியின் கருத்தை வரவேற்று ட்வீட் செய்த சீமான் , அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம் என்று பதிவிட்டுள்ளார். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது , ஆளக்கூடாது என்பது சீமானின் நிலைப்பாடு.
இந்நிலையில் ரஜினி கூறிய கருத்தை தாங்கள் அதற்காக தான் தொடர்ந்து போராடியுள்ளோம் என்ற வகையில் உள்ளதால் அவர் மறைமுகமாக ரஜினியை அரசியலுக்கு வராதீங்க என்று வரவேற்றுக்கும் தொனியில் உள்ளதாக ரஜினி ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!
இதே போன்று தான்,
அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!
— சீமான் (@SeemanOfficial) March 12, 2020