Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 3 மாசம் நீங்கதான்…! ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு ….!!

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலம் என்பது மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறது. வருகின்ற 31.07.2020ஆம் தேதியோடு தலைமைச்செயலாளரின் பதவிக்காலம்  முடிவடைகின்றது. இந்த நிலையில் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பி இருந்தது.

தமிழக அரசின் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்குகிறது. இதனால் 31.10.2020 ஆண்டு வரை தலைமை செயலாளர் சண்முகம் பணி காலம் நீடிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தொடர்பான நடவடிக்கைகளை  கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

Categories

Tech |