Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல் குற்றவாளி நீங்க தான்…! உங்க மேல கேஸ் போடுவோம்… போலீசை எச்சரித்த ADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்படும் ஒரு மிகப்பெரிய இயக்கம். 32 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட ஒரு இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தினுடைய தலைமை அலுவலகத்தை, காவல்துறையினுடைய துணையோடு, ஒத்துழைப்போடு, ஆதரவோடு இந்த குற்ற சம்பவத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க முதல் காரணம், முதல் குற்றவாளி தமிழகத்தினுடைய காவல்துறை. ஒரு சாதாரண குற்றமாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டும் ?உச்ச நீதிமன்றத்தின் உடைய தீர்ப்பின்படி புகார் அளித்தால், அந்தப் புகாரை பதிவு செய்யப்பட வேண்டும்.  புகாரின் நகலை புகார் அளித்தவர்களுக்கு தரப்பட வேண்டும். 32 ஆண்டு காலம் ஆண்ட ஒரு இயக்கத்தின் அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறது, சூறையாடப்பட்டிருக்கிறது.

அந்த குற்றத்தை நிகழ்த்தியவர் தமிழ்நாட்டினுடைய முன்னாள் முதலமைச்சர். சட்டம் தெரியாதவர் என்று சொல்ல முடியாது, சட்டத்தை நன்கு தெரிந்தவர். அப்படிப்பட்டவர் தனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட அந்த பாதுகாவலர்களோடு வந்து இந்த குற்ற சம்பவத்தை நிறைவேற்றி இருக்கிறார், இது அனைவரும் பார்த்து இருக்கிறார்கள் ஆதாரம் கண்ணுக்கு நேராக இருக்கிறது. ஆனால் இதிலே வழக்கு பதிவு செய்வதற்கு காலதாமதம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காவல்துறை தன் கடமையை செய்ய மறுக்கிறது, இதிலே உடந்தையாக இருக்கின்ற துணை போய்க் கொண்டிருக்கின்ற தமிழகத்தினுடைய காவல்துறை, குறிப்பாக காவல்துறை தலைவர்,  சிபிசிஐடியுனுடைய பொறுப்பை ஏற்று இருக்கின்ற ஏடிஜிபி, ஐஜி இதுக்கு முழுமையான பொறுப்பு ஏற்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் வேறு ஏதாவது குற்றங்கள் நடந்திருந்தால் அதற்கு முழுக்க முழுக்க தமிழகத்தினுடைய காவல்துறையே பொறுப்பு. உங்கள் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என எச்சரித்தார்.

Categories

Tech |