இயக்குனர் விக்னேஷ் சிவன் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித். நடிகர் அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், முன்னணி நடிகை நயன்தாராவின் காதலரும் ஆன விக்னேஷ் சிவன் தல அஜித் பிறந்தநாளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது, “எங்கள் தலைமுறைக்கும் இனி வரும் அடுத்த தலைமுறைகளுக்கும் என்றென்றும் நீங்கள்தான் ‘தல’. இன்று மட்டுமல்ல தமிழ் சினிமா இருக்கும் வரை அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை நாயகனின் பெயர் ஒலித்துகொண்டே இருக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்” என்று பதிவிட்டுள்ளார்.
எங்கள் தலைமுறைக்கும் இனி வரும் அடுத்த தலைமுறைகளுக்கும்
என்றென்றும் நீங்கள்தான் 'தல'!இன்று மட்டுமல்ல தமிழ் சினிமா இருக்கும் வரை அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை நாயகனின் பெயர் ஒலித்துகொண்டே இருக்கும்.
பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்! #HappyBirthdayThalaAjith Sir
GodBless😇❤️ pic.twitter.com/CpnzdgVKx2— VigneshShivan (@VigneshShivN) May 1, 2021