Categories
சினிமா தமிழ் சினிமா

“யோவ் ரொம்ப ஓவரா பிரஷர் ஏத்துற”….. ஜானி மாஸ்டரின் பதிவால் கடுப்பான தமன்…. டுவிட்டரில் சுவாரசிய பதிவு….!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாரிசு”. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது.

The team gave a new update of Varisu | வாரிசு படத்தின் புதிய அப்டேட்  கொடுத்த படக்குழு

இந்த படத்தில் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நடன மாஸ்டர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்னொரு வெற்றிகரமான பாடல் வர இருப்பதாகவும், பெல்லாரி படபிடிப்பில் பல நல்ல தருணங்கள் இருந்தன என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |