Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ ஏம்பா வர…. நான் நல்லா தான் இருக்கேன்…. நெகிழ்ந்து பேசிய C.M ஸ்டாலின் …!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியரை வார்த்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் அங்க போய் பார்க்கும் போதெலாம் அவர் சொல்வார்…  எவ்வளவோ பணிகள் இருக்கு.

நீ ஏம்பா வர,  நான் நல்லா தான் இருக்கேன் என்று பலமுறை சொல்லி இருக்கிறார். அந்தப் புண் சிரிப்பு முகம் இன்னும் என் நெஞ்சில் நிழலாடிகிட்டு இருக்கு. அவர் எந்த அளவுக்கு கோவக்காரரோ அந்த அளவுக்கு பாசக்காரர் என்பதை மறந்துவிட முடியாது. பேராசிரியருக்கு இணை பேராசிரியர் தான். இன்றைக்கு அவரை புகழை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம்  என்றால் அவரை பெருமைப்படுத்துவதற்காக மட்டுமல்ல…

தலைவர் கலைஞரும்,  நம்முடைய இனமான பேராசிரியரும் வாழ்ந்த காலத்திலே அனைத்தும் பெருமைகளையும் பெற்றுடாங்க, இனிமே நாம பெருமைப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது. வாழ்ந்தால் மக்களுக்காக வாழ்வேன்… என் தமிழகத்திற்காக வாழ்வேன்…  தாழ்ந்து போன தமிழகம் தலை நிமிர வாழ்வேன்…

உரிமை இழந்த இனம் உரிமைப் பெற வாழ்வேன் என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்தவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள். அவருடைய நூற்றாண்டுகள் கொண்டாடிகிற போது நாமும் அவர் வழியிலேயே நடைபோட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |