சண்டைக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியானது இன்று மீரா-தர்ஷன் சண்டையுடன் தொடங்கியது.
தமிழகத்தின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்,சீசன் 1,2வின் வெற்றியை தொடர்ந்து 3வது சீசனையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். காதல்,காமெடி என நிறைந்திருக்கும் பிக்பாஸ் வீட்டில் சண்டைகளுக்கு பஞ்சமே இருக்காது. தினந்தோறும் விறுவிறுப்பை கூட்டி வரும் இந்நிகழ்ச்சியில் 19 ஆவது நாளான இன்று, மீரா தர்ஷனுடன் பிக் பாஸ் வீட்டின் வளாகத்தின் முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருவரும் அவர்களது வாழ்நாள் நண்பர்களைப் பற்றி பேசி வந்தனர். இதில் மீரா பேசுகையில், நான் யாராக இருந்தாலும் பார்த்த உடனே அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ளும் திறன் கொண்டவள் என்று கூறினார்.மீராவின் இப்பேச்சு தர்ஷனுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்த,ஒருவரை பார்த்தவுடன் அவரது குணநலன்களை எப்படி கணிக்க முடியும் என்றும், அவ்வாறு உங்களால் தெரிந்து கொள்ள முடிந்தால் ஏன் உங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை வரப் போகிறது என்றும் தர்ஷன் கேள்வி எழுப்பினார்.
மேலும் பார்த்தவுடன் ஒருவரைப் பற்றி புரிந்து கொள்வதற்கு நீங்கள் ஒன்றும் ஞானி அல்ல என்றும் அறிவுறுத்தினார். தர்ஷனின் அறிவுரையை ஏற்காமல் மழுப்பி உளறிக் கொண்டே இருந்தார் மீரா. இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன் நீங்கள் ஞானி, நான் முட்டாள் என்னை விட்டு விடுங்கள் என்று கூறி எழுந்து சென்றுவிட மீரா மனக்கவலையில் தனியாக புலம்ப ஆரம்பித்துவிட்டார். பிக்பாஸ் வீட்டில் பலரும் மீராவை வெறுத்து வரும் நிலையில், வம்பு தும்புக்கே செல்லாத தர்ஷனும் மீராவை வெறுத்து விட்டார்.