Categories
தேசிய செய்திகள்

நீங்க தானே உடைத்தீங்க… அப்ப நீங்களே புது போன் வாங்கி கொடுங்க… மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு..!!

சுரஜ்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளைஞரை அறைந்து செல்போனை உடைத்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில் அந்த இளைஞருக்கு புது போன் வாங்கித் தருமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சுரஜ்பூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஊரடங்கை மீறி வாகனத்தில் சென்றதாக இளைஞர் ஒருவரை பிடித்த மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்தது மட்டுமல்லாமல் அவரது செல்போனை வாங்கி உடைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் அந்த இளைஞர் மருந்து வாங்க தான் வந்ததாக தெரிவித்த பின்னரும் காவல்துறையினர் அவரை லத்தியால் அடித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா மன்னிப்பு கோரினார். பின்னர் முதல்வர் மாவட்ட ஆட்சியரை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். தற்போது முதல்வர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மாவிடம் அந்த இளைஞருக்கு புது மொபைல் போனை வாங்கி தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |