உலகம் முழுவதிலுமுள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களை நான் வரவேற்கிறேன் என பிரதமர் மோடி ஐநாவில் பேசினார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஐநா சபையில் பேசும் போது, இந்தியாவில் வங்கி கடன் வசதிகள் கூட மக்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. எப்பொழுது இந்தியாவினுடைய வளர்ச்சி ஏற்படுகிறதோ கண்டிப்பாக உலகத்தினுடைய வளர்ச்சியும் அதிகரிக்கும். எப்பொழுது இந்தியா வளருகிறதோ அப்பொழுது உலகம் வளரும். எப்பொழுது இந்தியா புதிய வழிமுறைகளை கையாளுகிறதோ அப்பொழுது உலகமும் அதை பின்பற்றும்.
இந்தியா உலகத்திற்கு மிகப்பெரிய உதவியை செய்ய முடியும். குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் மிக திறமையான திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 350 கோடிக்கும் மேலான கொடுக்கல் வாங்கல்கள் வங்கிகள் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரே நாளில் ஒரு கோடி அளவிற்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இணைய வழி மூலமாக வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. சேவை செய்வது மிகச்சிறந்த தர்மமாகும்.
மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு தடுப்பூசிகளை உருவாக்குவதில்… தடுப்பூசியை அதிகமாக உற்பத்தி செய்வதில் வெற்றி கொண்டிருக்கிறோம். நான் உங்களுக்கு இதை தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா உலகத்திற்கு முதல் முறையாக முதல் DNA தடுப்பூசியை உருவாக்கி கொடுத்திருக்கிறது. இது அனைவருக்கும் செலுத்தப்பட முடியும். எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி தன்னுடைய கடைசி கட்டத்தில் இருக்கிறது. இந்தியாவில் நாசித் துவாரம் மூலமாக செலுத்தப்படும் தடுப்பூசிக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. அதற்கு உண்டான சோதனைகளும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்தியா உலகத்தில் யார் யாருக்கு தடுப்பூசி தேவையோ அவர்களுக்கு முழு உதவியையும் தடுப்பு ஊசி செலுத்தி அளித்திருக்கிறது. அவர்களுக்கு தடுப்பூசி வழங்கி முழு உதவியை அளித்து இருக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களை நான் வரவேற்கிறேன். நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள்… நீங்கள் இந்தியாவில் உங்களுடைய தடுப்பூசிகளை உற்பத்தி செய்யுங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.