இணையதளம் மூலமாக பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் உள் விவகார துறையால் நாட்டின் மிக உயர்ந்த இரண்டாவது விருதான பத்ம விருதுகள் 2022-ஆம் வருடம் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் பத்திரிக்கை, கவிதை எழுதுதல், கல்விச் சீர்திருத்தம், விளையாட்டு, இலக்கியம், கலை, கல்வி, மலை ஏறுதல், சாகசம், ஆயுர்வேதம், சித்த இயற்கை மருத்துவம், சமூகத்தொண்டு, தொழில்நுட்பம், அறிவியல், ஹோமியோபதி, யோகா இந்திய கலாச்சாரம், மனித உரிமை, காப்பு மற்றும் பொது விவகாரம் என பல துறைகளில் வியந்து சாதனை புரிந்தோருக்கு விருதுகள் வழங்கப்படும்.
இதனை அடுத்து அந்த விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் பத்மஸ்ரீ போன்ற விருதுகளுக்கு இம்மாவட்டத்தில் வசிப்பவர்களும் இணையதளம் மூலமாக சான்று மற்றும் உரிய ஆதாரங்களுடன் 15. 9. 2021 அன்றுக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் செயல்பட்டு வருகின்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.