Categories
அரசியல் மாநில செய்திகள்

“உங்க திறமைக்கு பிரதமரே ஆகலாம்”….. அவங்கள நீக்கிட்டா நீங்க தான் அடுத்த முதல்வர்…. அண்ணாமலைக்கு பறந்த கடிதம்…!!!!!

தமிழகத்தில் பாஜக கட்சியின் ஓபிசி பிரிவு மாநில தலைவராக இருந்த திருச்சி சூர்யா சிவாவை அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் அவர் பாஜகவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு  திருச்சி சூர்யா சிவா அண்ணாமலைக்கு தன் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தா. அதில், எனக்கு இதுவரை கட்சியில் பயணித்தது மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் தமிழக பாஜகவுக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம். இனி வரும் தேர்தலில் கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும்.

இந்த வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் திருச்சி சூர்யா சிவா அண்ணாமலைக்கு தற்போது ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் நீங்கள் தமிழக பாஜகவுக்கு கிடைத்த பொன்னான பரிசு. 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் தமிழகத்தின் முதல்வராக இருப்பீர்கள். உங்களுக்கு இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி கூட இருக்கிறது. ஏனெனில் நீங்கள் அவ்வளவு திறமையானவர்.

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதால் என்றென்றைக்கும் உங்கள் சகோதரனாக உங்கள் பின்னால் இருப்பேன். எல். முருகன் மற்றும் கேசவ விநாயகம் இப்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்களுடைய குறிக்கீடு மட்டும் இல்லை என்றால் அண்ணாமலையால் இன்னும் சிறப்பாக பணி செய்ய முடியும். நீங்கள் காயத்ரி ரகுராம் மற்றும் டெய்சி சரணுடன் உங்கள் விளையாட்டை காட்டாதீர்கள். மேலும் நீங்கள் இருவரும் என் தலைவனின் வழியில் குறுக்கிடாதீர்கள் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

Categories

Tech |