Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

ரூ.700 சிலிண்டரை ரூ.200க்கு பெறலாம்…. எப்படி தெரியுமா…?? உடனே செய்யுங்கள்…!!

ரூ.700 க்கு விற்கும் சிலிண்டரை பேடிஎம்மில் புக் செய்வதன் மூலம் ரூ.200 க்கு பெற முடியும். 

பெரும்பாலும் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சமையலுக்கு பயன்படுத்த படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் ஆகியவற்றின் விலையை மாதந்தோறும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கிறது. இந்நிலையில் தற்போது வீட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சிலிண்டரின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பேடிஎம்மில் பண்டிகை கால சலுகையாக பல்வேறு சலுகைகளை  அறிவித்துள்ளது.

அந்த வகையில் பேடிஎம் மூலம் பயனர்கள் சிலிண்டர் புக் செய்தால் 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்த சலுகை முதல்முறையாக பேடிஎம்மில் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். முதல் முறையாக பேடிஎம்மில் சிலிண்டர் புக் செய்யும்போது வாடிக்கையாளர்கள் FirstLpg என்ற குறியீட்டை உள்ளீடு செய்ய வேண்டும்.இவ்வாறு செய்யும் போது 500 ரூபாய்க்கு கேஷ் பேக் உங்களுக்கு கிடைக்கும். இந்த சலுகை வரும் 31ம் தேதி வரை மட்டுமே. இந்த செயலியில் ரீசார்ஜ் மற்றும் பே பில்ஸ் என்ற பகுதிக்கு சென்று சிலிண்டர் புக் செய்து இந்த அறிய வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Categories

Tech |