தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள சூளைமேடு தெருவில் சரவணன்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கம்பத்தில் சிறுமியை திருமணம் செய்துகொண்டு வசித்து வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் சரவணன் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் காவல்துறையினர் கம்பத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி சரணவனை பிடித்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு கொடுவிலார் படியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.