சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை சலூன் கடைகளை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர இதர மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடி திருத்தம் மற்றும் அழகு நிலையம் நாளை முதல் இயங்கலாம் என்ற ஒரு அனுமதியை தமிழக அரசு கொடுத்துள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் அனுமதி இயங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னைக்கு தற்போது அனுமதி இல்லை, அதே போலபிற மாவட்டங்களில் இருக்கக்கூடிய தடை செய்யப்பட்ட பகுதிகளில் சலூன் மற்றும் பியூட்டி பார்லர் இயங்க அனுமதி கிடையாது என்ற உத்தரவையும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
அதே போல தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணி அமர்த்த கூடாது என்ற ஒரு அறிவுறுத்தலையும் கொடுத்து இருக்கின்றது. முன்னதாக ஊரகப் பகுதிகளில் சலூன்கள் கடந்த 19ம் தேதி முதல் தொடர்ச்சியாக இயங்குவதற்கான அனுமதியை தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்த நிலையில் தற்போது பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ஊரகப் பகுதிகளை தவிர தமிழ்நாட்டின் அனைத்து ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் மற்றும் பியூட்டி பார்லர் இயங்குவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்:
சலூன் மற்றும் பியூட்டி பார்லரில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு வருகின்ற வாடிக்கையாளருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது.
வாடிக்கையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கிருமிநாசினி வழங்குவதை கடை உரிமையாளர் உறுதி செய்ய வேண்டும்.
கடையின் உரிமையாளர் மற்றும் அழகு நிலைய உரிமையாளர் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
பணியாளருக்கும் சோப்பு கொண்டு கைகளை கவச் சொல்ல வேண்டும்.
குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. மேலும் இதுகுறித்த விரிவான அறிக்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் முடி திருத்தம் செய்யாமல் இருந்த, பியூட்டி பார்லர் செல்ல முடியாமல் இருந்த அனைவருக்கும் இந்த உத்தரவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.