நெய் பிஸ்கட்
தேவையான பொருட்கள்:
மைதா- 100 கிராம்
நெய்-100 மில்லி
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை தூள் – 50 கிராம்
வெண்ணிலா எஸென்ஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஓவனை 10 நிமிடம் வரை 180 டிகிரி வெப்பப்படுத்திக் கொள்ள வேண்டும் . ஒரு கிண்ணத்தில் நெய், மைதா, சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா மற்றும் வெண்ணிலா எஸென்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை விரும்பிய வடிவத்திற்கு வெட்டி பேக்கிங் டிரேயில் அடுக்கி ஓவெனில் 25 நிமிடம் வரை வைத்து எடுத்தால் சுவையான நெய் பிஸ்கட் தயார் !!!